Tuesday, November 16, 2010

உண்மை யாதெனில் !

உயரும் கனவுகள்
மனதின் ஏக்கங்கள்
வாழ்கையின் ஒரு நாள் கனவு
உடலில் ஓர் பட்டாம்பூச்சி
சட்டென ஏதோ மகிழ்ச்சி - அதனூடே
தோன்றும் "முடியும்" என்பதான நம்பிக்கைகள்
.
.
.
முடிந்த போது !
இழப்பின் கனிந்த சோகம்
வெறித்து பார்க்கும் ஏக்கம்
வாழ்கை ஏனென - தொலைத்த
நிஜத்தின் பெரும் சீற்றம் !
குப்பைகள் சேரும் மனக்குளியில்
உணர்வு அலைகளின் உளைச்சல்கள்
அடங்கி - பின்
பிறிதொரு கனவு
பிறிதொரு கடமை
மனதோடு நம்பிக்கைகள் - ஏனோ
ஆறுதல் பலதில் அணைக்கப்பட்டு
பயணம் தொடர்ந்த போது
வாழ்க்கை யாதென
பாடம் பெற்றது "உண்மை".......