உயரும் கனவுகள் மனதின் ஏக்கங்கள் வாழ்கையின் ஒரு நாள் கனவு உடலில் ஓர் பட்டாம்பூச்சி சட்டென ஏதோ மகிழ்ச்சி - அதனூடே தோன்றும் "முடியும்" என்பதான நம்பிக்கைகள் . . . முடிந்த போது ! இழப்பின் கனிந்த சோகம் வெறித்து பார்க்கும் ஏக்கம் வாழ்கை ஏனென - தொலைத்த நிஜத்தின் பெரும் சீற்றம் ! குப்பைகள் சேரும் மனக்குளியில் உணர்வு அலைகளின் உளைச்சல்கள் அடங்கி - பின் பிறிதொரு கனவு பிறிதொரு கடமை மனதோடு நம்பிக்கைகள் - ஏனோ ஆறுதல் பலதில் அணைக்கப்பட்டு பயணம் தொடர்ந்த போது வாழ்க்கை யாதென பாடம் பெற்றது "உண்மை".......